கடலை வறுத்ததும், வறுத்த கடலையும்!
July 23, 2013
கடற்கரை ஓரம்
கரங்களைப் பற்றி
கால்கள் பதித்து
கொஞ்சம் பேச்சும்
கொஞ்சும் சிரிப்பும்
காற்றின் தாலாட்டில்,
கடிகார வேகம்
கூடிப் போக,
கைகள் கொண்டு
கழுத்தோடு அணைத்து
கண்கள் நோக்க
காற்று தாலாட்ட
காதின் ஓரம்
காதல் சொல்ல,
கைகளை இறுக
கண்களும் துடிக்க
கொடூர அமைதி
காதல் எதிரொலி!
காதலின் அளவு?
கடலின் ஆழம்
கடலின் நீளம்!
கவிதை பொழிய
கடலை வறுத்ததும்
வறுத்த கடலையும்!